ஆன்மிகம்

அம்பை வாகைபதி நாராயணசாமி கோவிலில் தேரோட்டம்

வாகைக்குளம், அம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதி நாராயணசாமி கோவிலில் தை மாத பெருந்திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் இரவு அன்னதர்மம், காலை மற்றும் இரவு வாகைபதி அய்யா ஆதிநாராயண வைகுண்டர் நிச்சயித்தபடி பல்வேறு வாகனங்களில் பவனி நடைபெற்றது.

11-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் வாகைக்குளம், அம்பை, கோடாரங்குளம், அய்யனார்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேரிழுத்தனர். இரவு அன்னதர்மம் நடைபெற்றது.

தொடர்ந்து இரவு ரிஷப வாகன பவனியும், கொடியிறக்குதலும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வாகைபதி நிர்வாகிகள் மற்றும் அன்புக் கொடிமக்கள் செய்திருந்தனர்.