ஆன்மிகம்

திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் சன்னதி தெருவில் வடக்கு திசை நோக்கி வீற்றிருக்கும் அகத்தீஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கடந்த 2-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் 4 கால யாக சாலை பூஜைகள், ஹோமங்கள், பூர்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.

யாகசாலை பூஜைகள் நேற்று காலை நிறைவடைந்ததும் யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசத்தை எடுத்து வந்து கோபுர கலசங்களுக்கும், பின்னர் மூலவர் அகத்தீஸ்வரர் அகிலாண்டேஸ்வரிக்கும் மகா கும்பாபிஷேகம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.