ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 26-ம் தேதி தெப்போற்சவம் ஆரம்பம்

தெப்போற்சவத்தை முன்னிட்டு ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தெப்போற்சவம் விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. கோவில் அருகே உள்ள சுவாமி புஷ்கரணியில் தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தெப்போற்சவம் நடக்கிறது.

முதல் நாளான 26-ம் தேதி சுவாமி புஷ்கரணியில் (தெப்பக்குளம்) உள்ள அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

27-ம் தேதி ஸ்ரீகிருஷ்ணர், ருக்மினி தேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

28-ம் தேதி உற்சவர்களான மலையப்ப சுவாமி, தாயாருடன் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

மார்ச் 1-ம் தேதி உற்சவர்களான மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி 5 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். நிறைவு நாளில் (மார்ச் 2) உற்சவர்களான மலையப்ப சுவாமி 7 சுற்றுகள் தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

Also read:திருக்குறுங்குடி பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

தெப்போற்சவத்தை முன்னிட்டு பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சஹஸ்ர தீபாலங்கார சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதேபோல் பிப்ரவரி 28, மார்ச் 1 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவையை ரத்து செய்துள்ளது.

பட்ஜெட் 2026-27: சாமானிய மக்களுக்கு என்ன பலன்கள்.. எதெல்லாம் விலை குறையும்?

என்னென்ன அமெரிக்க வேளாண் விளைபொருட்களுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்: சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்; நிர்மலா சீதாராமன்

மராட்டியம்: சிறுவன் ஓட்டிய சொகுசு கார் மோதி 3 பேர் படுகாயம்