விளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் 
ஆன்மிகம்

கயத்தார் சந்தனமாதா ஆலயத்தில் விளக்கு பூஜை

விளக்கு பூஜையைத் தொடர்ந்து இரவில் மேளதாளத்துடன் மாதா சப்பர பவனி நடைபெற்றது.

கயத்தாறில் தூய சந்தனமாதா ஆலயத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலையிலும் மாலையிலும் சிறப்பு சொற்பொழிவு ஆராதனை நடைபெற்றன. எட்டாம் திருநாளன்று இரவு 8.30 மணிக்கு 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர். மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவு, நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

இரவு 10 மணிக்கு மேளதாளத்துடன் மாதா சப்பர பவனி நடைபெற்றது. இந்த பணி கயத்தாறு ஆஸ்பத்திரி சாலையில், பழைய கடம்பூர் ரோடு, வாரச்சந்தை சாலை உள்பட முக்கிய ரத வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் திரளான இறைமக்கள் கலந்துகொண்டனர்.