ஆன்மிகம்

வார விடுமுறை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் கோவிலுக்கு சுபமுகூர்த்தம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் வருவது வழக்கம்.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா, விடுமுறை, பண்டிகை மற்றும் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் வருவது வழக்கம்.

அந்த வகையில், வார விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபா ராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றன.

அதிகாலை முதலே திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் அவர்கள் கடலிலும், நாழிக்கிணறு தீர்த்தத்திலும் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே சமயம், சுபமுகூர்த்த தினம் என்பதால் கோவில் வளாகத்தில் இன்று சுமார் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்துவதற்காக அவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் வருகை தந்திருந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவில் களைகட்டியுள்ளது.