சினிமா துளிகள்

தனுஷ் பட நாயகிக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம்

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக வந்தவர், ரெஜிஷா விஜயன்.

தினத்தந்தி

கேரளாவில் இருந்து தமிழ் பட உலகுக்கு இறக்குமதியான இன்னொரு அழகி. கர்ணன் படத்தின் வெற்றி, ரெஜிஷா மார்க்கெட்டை உயரமாக தூக்கி நிறுத்தி இருக்கிறது.

இவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 5 மொழி திரையுலகில் இருந்தும் பட வாய்ப்பு கள் வந்து குவிகிறது. அடுத்து இவர், கார்த்தி ஜோடியாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சூர்யா ஜோடியாக புதிய படத்துக்காக அவருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

தொடர்ந்து அடிக்கிறது அதிர்ஷ்டம்!

கார்த்தி ஜோடியாக நடிக்கும் படத்தில், இன்னொரு கதாநாயகியாக ராசிகன்னாவும் இருக்கிறார். மித்ரன் டைரக்டு செய்கிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்