பெங்களூரு

வைர வியாபாரியை கடத்தி கொள்ளை: ரவுடி உள்பட 3 பேர் சிக்கினர்

மண்டியா மாவட்டத்தில் வைர வியாபாரியை கடத்தி கொள்ளை அடித்த ரவுடி உள்பட 3 பேர் போலீசில் சிக்கினர்.

மண்டியா:

மண்டியா மாவட்டத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டு வந்தார். பெங்களூருவில் சில வியாபாரிகளை சந்தித்து பணத்தை வாங்கி கொண்டு, மண்டியாவுக்கு நள்ளிரவு நந்தினி லே-அவுட் வழியாக அவர் காரில் சென்றார். அப்போது மற்றொரு காரில் வந்த மர்மநபர்கள், வியாபாரியின் காரை வழிமறித்து அவரை கடத்தி சென்று அவர் வைத்திருந்த ரூ.24 லட்சம், 6 வங்கி காசோலைகள் மற்றும் செல்போனை மாமநபர்கள் கொள்ளையடித்து கொண்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் நந்தினி லே-அவுட் போலீசார் வைர வியாபாரியிடம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தலைமறைவாக இருந்த 3 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் நாராயணா (வயது 55), உமேஷ் (37), நூதன் (37) என்று தெரிந்தது. இவர்களில் நாராயணா ரவுடி ஆவார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு