சினிமா துளிகள்

முன்னணி நடிகர்களுடன் கைக்கோர்த்த இயக்குனர் வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் என்சி22. இந்த படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

மேலும், இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இணைந்துள்ள கதாநாயகர்களை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, என்சி22 திரைப்படத்தில் நடிகர் சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் இணைந்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்