மாவட்ட செய்திகள்

தர்மபுரியில் இன்று தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. அறிக்கை

தர்மபுரி மாவட்ட தி.மு.க.செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தி.மு.க.செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டசபையில் அரங்கேற்றப்பட்ட ஜனநாயக படுகொலையை கண்டித்தும், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் எதிரில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்பினர், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்து உள்ளார்.