புதுச்சேரி

விடுதிகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா?

காரைக்காலில் விடுதிகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தினத்தந்தி

காரைக்கால்

விடுதிகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ரகசிய கேமரா

புதுச்சேரியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விடுதி ஒன்றின் அறையில் காதல் ஜோடி தங்கி இருந்தனர். அந்த அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை அவர்கள் கண்டுபிடித்து போலீசில் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள விடுதிகளில் போலீசார் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

காரைக்காலில் ஆய்வு

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் திடீரென காரைக்காலில் உள்ள விடுதி அறைகள், குளியல் அறை, மின்சாதன பொருட்கள் மற்றும் ஸ்குருக்கள் ஆகியவற்றில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என மொபைல் போனில் உள்ள ஆப்பின் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

போலீசார் ஆய்வுக்கு வருவதை அறிந்த சில விடுதிகளில் உஷாராக கேமராக்கள் அகற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. மேலும் விடுதி அறைகளில் ஏதாவது ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு