மும்பை

டோம்பிவிலி கட்டிடம் இடிந்த விபத்தில் வங்கி ஊழியர் பிணமாக மீட்பு

டோம்பிவிலியில் கட்டிடம் இடிந்த விபத்தில் வங்கி ஊழியர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது

தினத்தந்தி

தானே, 

டோம்பிவிலி ஆயிரே கிராமத்தில் ஆதிநாராயண் என்ற 4 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்த 8 பேரை காயத்துடன் மீட்டனர். மேலும் சூரஜ் என்பவரை பிணமாக மீட்டனர். கட்டிட இடிபாடுகளில் மேலும் 2 பேர் சிக்கி இருப்பது தெரியவந்தது. இவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. நேற்று தீப்தி என்ற பெண்ணை பலத்த காயத்துடன் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர இடிபாடுகளில் சிக்கிய வங்கி ஊழியர் அரவிந்த் பாவ்சர் (70) என்பவரை பிணமாக மீட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு