புதுச்சேரி

வாய்க்கால் தூர்வாரும் பணி

மகாத்மாகாந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியை எதிர்க்கட்சி தலவைர் சிவா தொடங்கி வைத்தார்.

வில்லியனூர்

வில்லியனூர் தொகுதி ஒதியம்பட்டு கிராம பஞ்சாயத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (100 நாள வேலை திட்டம்) கீழ் ரூ.5 லட்சத்து 16 ஆயிரம் செலவில் ஒதியம்பட்டு தாங்கல் பகுதி முதல் சந்திகுப்பம் வரை வாய்க்கால் தூர்வாரப்படுகிறது.

இந்த பணியை தொகுதி எம்.எல்.ஏ.வும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமார், உதவி பொறியாளர் ராமன் மற்றும் தி.மு.க. கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்