மாவட்ட செய்திகள்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது.

கூடலூர்:

கம்பம் நகராட்சி பகுதிகளுக்கு லோயர்கேம்ப்பில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு காளியம்மன் கோவில் அருகே கூட்டுக் குடிநீர் குழாயில் திடீரனெறு உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து குடிநீர் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வேதனை அடைந்தனர். உடனே இதுகுறித்து கம்பம் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் நேற்று காலை வரை ஊழியர்கள் யாரும் அங்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் வீணாகி வருகிறது. உடைந்த குழாயை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரிய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.