புதுச்சேரி
புதுச்சேரி பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் இன்று கடற்கரை சாலையில் காந்திசிலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாணையில் அவர், செட்டி தெருவை சேர்ந்த மைக்கேல் விஜய் (வயது 39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் வைத்திக்குப்பம் பாப்பம்மாள் கோவில் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சுரேந்தர் (24) என்பவரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர்.