புதுச்சேரி
புதுச்சேரியில் பொது இடத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களையும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி பல்வேறு பகுதிகளில் குடிபோதையில் ரகளை செய்ததாக ரெட்டியார்பாளையம் வசந்த் (வயது41), சேதராப்பட்டு ஞானபிரகாசம் (26), பெரியகடை செந்தில்குமார் (47), ஒதியஞ்சாலை நாகராஜ் (24), நெட்டப்பாக்கம் தமிழ்மணி (27), வில்லியனூர் மணிகண்டன் (30) ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.