நகைச்சுவை நடிகர் மயில்சாமி, ஒரு படவிழாவில் மனம் திறந்து பேசினார். முன்பு ஒரு காலகட்டத்தில் எனக்கு சினிமா வாய்ப்புகள் குறைவாகவே வந்தன. அதனால் சினிமாவை விட்டு விலக நினைத்தேன். என் முடிவை கேட்டு நடிகர் சிவகுமார் வருத்தப்பட்டார். உனக்குன்னு ஒரு நேரம் வரும். அதுவரை காத்திரு என்று கூறினார். நானும் காத்திருந்தேன்.
இப்போது நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. எல்லாமே சாமியார் அல்லது குடிகாரன் வேடங்கள். வித்தியாசமான வேடங்களுக்காக காத்திருக்கிறேன் என்றார், மயில்சாமி.