புதுச்சேரி

தொழிற்சாலை கழிவுகளை கொட்டி தீ வைப்பு

புதுவை செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டி தீ வைத்தனர்.

தினத்தந்தி

வில்லியனூர்

புதுச்சேரி கிராமப்புறங்களில் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குருமாம்பேட் குப்பை கிடங்களில் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது தனியார் நிறுவனம் மூலம் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் யாரோ மர்ம நபர்கள் தொழிற்சாலை கழிவுகளை டன் கணக்கில் செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரையில் கொட்டி தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கரும்புகை கிளம்பி இருள் சூழ்ந்து சுற்றுச்சூழல் மாசடைந்தது. மேலும் அப்பகுதி கிராம பொதுமக்கள் மற்றும் செங்கல் சூளையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குமூச்சு திணறல் ஏற்பட்டது.

மேலும் அந்த வழியாக சென்றவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு சென்றதால் கடும் சிரமத்துக்குள்ளாகினர். எனவே, ஆற்றங்கரையில் குப்பைகளை கொட்டி தீயிட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை