சென்னை,
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு நடந்து வருகிறது. ஏற்கனவே தமிழ் தேர்வு முடிந்த நிலையில் இன்று ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஆங்கில தேர்வை 10 ஆயிரம் பேர் எழுதவில்லை. இது தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று (5-3-2026) நடைபெற்ற மேல்நிலை 2-ம் ஆண்டு ஆங்கில மொழிப்பாடத் தேர்வில் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த மொத்தம் 8 லட்சத்து 16 ஆயிரத்து 108 (பள்ளி தேர்வர் - 7 லட்சத்து 99 ஆயிரத்து 692, தனித் தேர்வர் 16 ஆயிரத்து 416) தேர்வர்களில் மொத்தம் 10 ஆயிரத்து 69 (பள்ளி தேர்வர் 8 ஆயிரத்து 436, தனித்தேர்வர் 1,633) தேர்வர்கள் தேர்வுக்கு வருகைப் புரியவில்லை.
மேலும், இன்றைய தேர்வில் 2 தேர்வர்கள் (1 பள்ளித்தேர்வர் (கோவை மாவட்டம், 1 தனித் தேர்வர் கரூர் மாவட்டம்) தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக தகவல் பெறப்பட்டுள்ளது. ”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.