கல்வி/வேலைவாய்ப்பு

ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு: தகுதி வாய்ந்த இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தினத்தந்தி

திருச்சி,

அக்னி வீரர்களின் (ராணுவத்தில்) பல்வேறு பிரிவுகளில் ஆட்சேர்ப்புக்கான பதிவு இப்போது ஆன்லைனில் திறக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இதில் அக்னிவீர் பொதுப்பணி, தொழில்நுட்ப பிரிவு, அலுவலக உதவியாளர்/ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 8-ம் வகுப்பு தேர்ச்சி ஆகிய பிரிவுகளில் ஆன்லைனில் பதிவு செய்ய www.joinindianarmy.nic.in. ராணுவ இணையதளத்தை அணுக வேண்டும் என திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்