கல்வி/வேலைவாய்ப்பு

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

குரூப் 1 தேர்வு மூலம் மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியது. அதிகபட்சமாக துணை ஆட்சியர் பணியிடத்துக்கு 28 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று 3 நிலைகளில் இந்தத் தேர்வு நடைபெறும்.

குரூப்-1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் 15-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதே தேதியில், சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வும் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகம், வரும் 15ஆம் தேதி நடைபெற இருந்த தொலைதூரப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. மேலும், தேர்வுக்கான மாற்றுத் தேதிகளை சென்னை பல்கலைக்கழகம் www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை