கல்வி/வேலைவாய்ப்பு

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு: தனித் தேர்வர்கள் 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தொடக்க கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தொடக்க கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வு வருகிற மே மாதம் 23-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 2-ந்தேதி வரையிலும், 2-ம் ஆண்டு தேர்வு ஜூன் 3-ந்தேதி முதல் ஜூன் 11-ந்தேதி வரையிலம் நடைபெறுகிறது.

இதற்கான, தனித் தேர்வர்கள் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. தனித் தேர்வர்கள், தங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு விண்ணப்பிக்காத தனித் தேர்வர்கள், வருகிற 25, 26 ஆகிய தேதிகளில், சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1,000 செலுத்தி தட்கள் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை