கல்வி/வேலைவாய்ப்பு

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி மாலை 5 மணி வரை www.trb.tn.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இயற்பியலில் 233, கணிதத்தில் 232, தமிழில் 216, ஆங்கிலம் 197, வணிகவியல் 198, வேதியியலில் 217 காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 28-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது. அறிவிப்பு தொடர்பான கோரிக்கை மனுக்களை trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பணிக்கு படித்துவிட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து