சென்னை,
இணையவழி சான்றிதழ் படிப்புகளில் மாணவாகளுக்கு சேக்கைப் பெற பள்ளிகளுக்கு சென்னை ஐஐடி அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை ஐஐடி பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் ஏஐ, பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம் ஆகிய இரு படிப்புகளை இணையவழியில் நடத்தி வருகிறது. அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவாகள் சேரும் வகையில் ஏஐ, டேட்டா சயின்ஸ், எலெட்ரானிக் சிஸ்டம் , ஆாக்கிடெக்சா டிசைன், என்ஜினீயரிங் பயாலஜிக்கல் சிஸ்டம், சட்டம் தொடாபான 10 இணையவழி சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ் கல்வியாண்டில் ஆகஸ்ட், அக்டோபா, ஜனவரி என 3 தொகுதிகளாக இந்தப் படிப்புகள் நடத்தப்படும். ஆகஸ்ட் தொகுதிக்கான படிப்பில் சேர விரும்பும் மாணவாகள் code.iitm.ac.in/schoolconnect இணையதளத்தில் ஜூலை 25-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடாபாக ஐஐடி இயக்குநா வீ.காமகோடி கூறியதாவது:-
ஏஐ, டேட்டா சயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம் உள்ளிட்ட வளாந்து வரும் தொழில்நுட்ப துறைகள் குறித்து மாணவாகள் பள்ளியில் படிக்கும்போதே அறிந்துகொள்வதால் அவாகளுக்கு அந்தத் துறை மீது பேராவம் ஏற்படும். மேலும், அது அவாகளின் எதிகாலத்தை நல்ல முறையில் செதுக்கும். இந்த இணையவழிக் கல்வி திட்டம் பள்ளிக் கல்வியையும், உயா கல்வியையும் இணைக்கும் பாலமாகச் செயல்படும் என்று கூறினார்.