கல்வி/வேலைவாய்ப்பு

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உதவி மேலாளர் நிலையிலான கிரெடிட் ஆபிசர் (Credit Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உதவி மேலாளர் நிலையிலான கிரெடிட் ஆபிசர் (Credit Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.02.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பணி: கடன் வழங்கும் அதிகாரி (Credit Officer)

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 1000

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 30.11.2024 அன்று 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தளர்வு: மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

எஸ்.சி/எஸ்.டி(SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

ஓபிசி(OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

பொதுப்பிரிவு(GEN) மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள்

சம்பளம்: ரூ. 48480-2000/7-62480-2340/2-67160-2680/7-85920

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு முறை:

கணினி வழித் தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் வங்கி, பொருளாதாரம், கணினி ஆகிய பகுதிகளில் இருந்து 120 வினாக்கள் கேட்கப்படும். மேலும் 30 மதிப்பெண்களுக்கு கட்டுரை வடிவிலான கேள்வி இடம்பெறும். இதற்கான கால அளவு 2 மணி நேரம்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/cbicojan25/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.02.2025

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.750. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.150

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்