இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்று பெடரல் வங்கி. கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பெடரல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்கள் பின்வருமாறு;
பணியிடங்கள்: அசோசியேட் அதிகாரி (விற்பனை)
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்; தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.4.64 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.6.70 லட்சம் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை: குழு விவாதம், திறனறித் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.500. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 04 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.federal.bank.in/careers