கல்வி/வேலைவாய்ப்பு

சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜர் கோவிலில் வேலை வாய்ப்பு- 10 காலிப்பணியிடங்கள்

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்களை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை திருவொற்றியூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்களை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: இளநிலை உதவியாளர், சேகரிப்பு எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் (காவலர்), வேதபாராயணம், உதவி சமையல்காரர் (ஸ்வயம்பகம்) பிரிவுகளில் மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்,

ஜுனியர் அசிஸ்டண்ட், கலெக்ஷன் கிளர்க் பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 45 வரை

சம்பளம்: மாதம் ரூ.18,500 58,600 வரை

தேர்வு முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி;

உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில், திருவொற்றியூர், சென்னை 600019.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.01.2026

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://thiruvottiyurvadivudaiamman.hrce.tn.gov.in/

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்