கல்வி&வேலைவாய்ப்பு

மத்திய காவல்படையில் வேலை: 827 பணியிடங்கள்- எஸ்.எஸ்.பி வெளியிட்ட அறிவிப்பு

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல் அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.பி (SSB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்:

கான்ஸ்டபிள் (டிரைவர், டெய்லர், பார்பர், வெயிட்டர், கார்பெண்டர் , தோட்ட பராமரிப்பளர்) என 11 வகையான பிரிவுகளில் மொத்தம் 827 பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். துறைசார்ந்த பிரிவில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு; 18 வயது முதல் 27 வரை

சம்பளம்: ரூ.21,700- 69,100 வரை

தேர்வு முறை: உடல் தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபர்ப்பு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிப்பது எப்படி? https://ssb.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்; 21.03.2026

விண்ணப்பிக்க கடைசி நாள்; 20.04.2026 கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssb.gov.in/