கல்வி/வேலைவாய்ப்பு

முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியீடு

முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

எம்.டி., எம்.எஸ். மற்றும் முதுகலை டிப்ளமோ போன்ற மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான முதுகலை நீட் (நீட் பி.ஜி.) தேர்வு நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 301 நகரங்களில் 1,052 தேர்வு மையங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதி இருக்கிறார்கள்.

ஒரே ஷிப்டில் கணினி வாயிலாக முதல்முறையாக சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய தேர்வாக முதுகலை நீட் தேர்வு பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 17 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களில் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வின் முடிவுகளை http://natboard.edu.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை