கல்வி/வேலைவாய்ப்பு

12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரெயில்வேயில் வேலை

3,058 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

இந்திய ரெயில்வே துறைக்கு ஆட்களை தேர்வு செய்யும் ரெயில்வே தேர்வாணையம் 3,058 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமர்சியல் - டிக்கெட் கிளர்க் பதவிக்கு 2,424 பேரும், அக்கவுண்ட் கிளர்க் - டைப்பிஸ்ட் பணிக்கு 394 பேரும், ஜூனியர் கிளர்க்-டைப்பிஸ்ட் பதவிக்கு 163 பேரும், டிரெயின் கிளர்க் பணிக்கு 77 பேரும் தேர்ந்தெடுக்கபட உள்ளனர்.

27-11-2025 அன்றைய தேதிப்படி இந்த பணிகளுக்கு 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்கவுண்ட் கிளர்க் - டைப்பிஸ்ட் மற்றும் ஜூனியர் கிளர்க்-டைப்பிஸ்ட் பணிகளுக்கு மட்டும் 12-ம் வகுப்புடன் டைப்பிங் தேர்ச்சியும், அடிப்படை கம்ப்யூட்டர் இயக்க திறனும் அவசியமானது. வயது வரம்பை பொறுத்தவரை 27-11-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வயது தளர்வு அனுமதிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (முதல் நிலை, இரண்டாம் நிலை), தட்டச்சு திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 27-11-2025 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப நடைமுறை சம்பந்தப்பட்ட விரிவான விவரங்களை https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்