கல்வி/வேலைவாய்ப்பு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 996 காலிப்பணியிடங்கள்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்த காலிப்பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பக்கலாம், கல்வி தகுதி என்ன என்பதை காணலாம்.

தினத்தந்தி

நாட்டின் மிகப்பெரிய பொத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கியில் 996 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு:

பணி நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.)

காலி பணி இடங்கள்: 996

பதவி பெயர்: ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி (ஒப்பந்த அடிப்படை)

கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு. பணி அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

வயது: 1-5-2025 அன்றைய தேதிப்படி வி.பி.வெல்த் பதவிக்கு குறைந்தபட்ச வயது: 26, அதிகபட்ச வயது: 42, ஏ.வி.பி. வெல்த் பதவிக்கு குறைந்தபட்ச வயது: 23, அதிகபட்ச வயது: 35. கஸ்டமர் ரிலேஷன்ஷிப் எக்சிகியூட்டிவ் பதவிக்கு குறைந்தபட்ச வயது: 20; அதிகபட்ச வயது: 35. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகள் உள்பட)

தேர்வு முறை: ஷார்ட்லிஸ்ட், நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-12-2025

இணையதள முகவரி: https://sbi.bank.in/web/careers/current-openings

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை