image credit: Ai  
கல்வி/வேலைவாய்ப்பு

தமிழக அரசு வேலை: 999 காலியிடங்கள்- நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் காலியாக உள்ள நர்சிங் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 999 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள் : 999 நர்சிங் உதவியாளர் பணியிடங்கள்

கல்வித்தகுதி : விண்ணப்பதார்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றி இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் கட்டாயமாகும். மேலும், அரசு மருத்துவ கல்லூரியில் நர்சிங் உதவியாளர் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2026 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம் எவ்வளவு? : நர்சிங் உதவியாளர் கிரேடு II பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.15,700 முதல் 58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை: தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை கிடையாது. விண்ணப்பதார்களின் மதிப்பெண்கள், தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். அதாவது விண்ணப்பதார்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து 40 சதவீதம் மற்றும் நர்சிங் உதவியாளர் பயிற்சி சான்றிதழில் இருந்து 60 சதவீதம் என்ற அடிப்படையில் 100 சதவீதத்திற்கு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.02.2026

விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படுகிறது.

தேர்வு அறிவிப்பினை  படிக்க: 

https://mrb.tn.gov.in/departments_cms/uploads/tami_800/content_pdf/NotificationforthepostofNursingAssistantGradeII.pdf

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி