கல்வி/வேலைவாய்ப்பு

ரெயில்வேயில் டெக்னீசியன் வேலை: 6,180 பணியிடங்கள்: கல்வி தகுதி என்ன?

ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 6,180 டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தினத்தந்தி

சென்னை,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெயில்வேயில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 6,180 டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணி நிறுவனம் : இந்திய ரெயில்வே

பணியிடங்கள் : 6,180 டெக்னீசியன் பணியிடங்கள்

கல்வி தகுதி : ஐடிஐ, டிப்ளமோ, பி இ, பி.எஸ்.சி

வயது வரம்பு : 18 வயது முதல் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம் எவ்வளவு : ரூ.29,200/ முதல்

தேர்வு முறை : கணிணி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை

விண்ணப்ப கட்டணம் : ரூ.500 செலுத்த வேண்டும், எஸ்சி/எஸ்டி, / முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ/.250 கட்டனம் செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய முழு கட்டணமும் திருப்பி தரப்படும்.ரூ.500 கட்டணம் செலுத்துபவர்களுக்கு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள் : 28.06.2025

விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.07.2025

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்: https://www.rrbchennai.gov.in/- என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு