கல்வி/வேலைவாய்ப்பு

மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியானது.

தினத்தந்தி

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியானது. தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று (25.6.2025) இறுதி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 29ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 29ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேர இதுவரையில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து