கல்வி/வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

குரூப் 4 தேர்வில் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு  தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு ஆகும்.

பணியிடங்கள் விவரம்:

வி.ஏஓ: 215

இளநிலை உதவியாளர்: 1678

இளநிலை வருவாய் ஆய்வாளர்: 239

இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்: 01

தட்டச்சர் (டைப்பிஸ்ட்) ; 1099

வனக்காப்பாளர்; 62

என 25 வகையான பணிகளில் 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து