கல்வி/வேலைவாய்ப்பு

ஐக்கிய அரபு அமீரகம்; வெல்டர், பிட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெல்டர், பைப்பிங் பேப்ரிகேட்டர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக அலுவலர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெல்டர், பைப்பிங் பேப்ரிகேட்டர். பைப்பிங் பிட்டர், ஸ்ட்ரக்சர் பேப்ரிகேட்டர், ஸ்ட்ரக்சர் பிட்டர், மில்ரைட் பிட்டர், கிரைண்டர்/கேஸ் கட்டர் மற்றும் பைப்பிங் போர்மேன் ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகின்றனர். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்.

கல்வித்தகுதி:

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 44 வயது

சம்பள விவரம்:

வெல்டர் - ரூ.40,000/-முதல் ரூ. 78,000/-வரை ,பைப்பிங் பேப்ரிகேட்டர் ரூ. 40,000/-முதல் ரூ.51,000 வரை, பைப்பிங் பிட்டர் ரூ.36,000/-முதல் ரூ.42,000 வரை,ஸ்ட்ரக்சர் பேப்ரிகேட்டர் ரூ.42,000/- முதல் ரூ.51,000 வரை, Structure Fitter ரூ.36,000/- முதல் ரூ.42,000 வரை, மில்ரைட் பிட்டர் ரூ.42,000/- முதல் ரூ. 51,000/- வரை, கிரைண்டர்/கேஸ் கட்டர் ரூ. 30,000/- முதல் ரூ. 32000/- வரை மற்றும் பைப்பிங் போர்மேன் ரூ.53000/- முதல் ரூ. 60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

மேலும் உணவு மற்றும் இருப்பிடம். வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக 35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.

நேர்காணல்:

31.01.2025 மற்றும் 01.02.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் (Resume, Passport Original Copy) Aadhar Copy & Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அனுகவும்.

முகவரி:

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்) ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்

42.ஆவந்தூர் ரோடு, திரு.வி.க தொழிற்பேட்டை கிண்டி சென்னை-32

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவ வலைதளம் www.omcmanpower.in.gov.in தொலைபேசி எண் 044-22502267 மற்றும் whatsapp எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து