கல்வி/வேலைவாய்ப்பு

யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்

தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்ளிட்ட ஏராளமான போட்டித்தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்துகிறது.

இந்த நிலையில், 2025-ம் ஆண்டு யுபிஎஸ்சி பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து கடந்தாண்டு 136 பேர் பிரதானத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது. அதேவேளையில், 2024ல் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 48ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 85ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து இந்தாண்டு தேர்ச்சி அடைந்த மாணவர்களில், 54.84% பேர் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள், இது கடந்தாண்டு 35.29% ஆக இருந்தது. 2025 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி பிரதானத் தேர்வில் நாடு முழுவதும் 2,736 பேர் தேர்வாகியுள்ள நிலையில், அவர்கள் அடுத்தக்கட்டமாக நேர்முகத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து