கல்வி/வேலைவாய்ப்பு

யு.பி.எஸ்.சி: தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு; 457 காலிப்பணியிடங்கள்....

தேசிய பாதுகாப்பு அகாடமியில் 457 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தினத்தந்தி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடமி, விமானப்படை அகாடமி மற்றும் கடற்படை அகாடமி,அதிகாரிகள் பயிற்சி அகாடமி (National Defence Academy,Officers Training Academy,Air Force Academy & Naval Academy) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 457 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பணியின் விவரம்:

இந்திய ராணுவ அகாடமி - 100, இந்திய கடற்படை அகாடமி - 32, விமானப்படை அகாடமி - 32,அதிகாரிகள் பயிற்சி அகாடமி (123வது SSC ஆண்கள்) 275, அதிகாரிகள் பயிற்சி அகாடமி (37வது SSC பெண்கள்) - 18

காலிப்பணியிடங்கள்:457

வயது வரம்பு :

ஐ.எம்.ஏ/ஐ.என்.ஏ: 02.01.2002 மற்றும் 01.01.2007 க்கு இடையில் பிறந்த திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

விமானப்படை அகாடமி: 01.01.2026 ன் படி 2024 ஆண்டுகள் (செல்லுபடியாகும் வணிக விமானி உரிமத்துடன் 26 ஆண்டுகள் வரை தளர்த்தப்பட்டுள்ளது).

அதிகாரிகள் பயிற்சி அகாடமி(OTA) ஆண்கள்: 02.01.2001 மற்றும் 01.01.2007 க்கு இடையில் பிறந்த திருமணமாகாத ஆண்கள்.

அதிகாரிகள் பயிற்சி அகாடமி(OTA) பெண்கள்: 02.01.2001 மற்றும் 01.01.2007 க்கு இடையில் பிறந்த திருமணமாகாத பெண்கள், விதவைகள் அல்லது விவாகரத்து பெற்றவர்கள்.

கல்வி தகுதி:

ஐ.எம்.ஏ மற்றும் அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய கடற்படை அகாடமி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பொறியியல் பெற்றிருக்க வேண்டும்.

விமானப்படை அகாடமி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் (10+2 அளவில் இயற்பியல் மற்றும் கணிதத்துடன்) அல்லது பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,எஸ்.எஸ்.பி (SSB) நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்கும் முறை: https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

மற்ற பிரிவினர்(Others) ரூ.200 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்.

எஸ்.சி/எஸ்.டி(SC/ST) பிரிவினர்,பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பம் வெளியான தேதி: 11.12.2024

விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி: 11.12.2024

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 31.12.2024

அட்மிட் கார்டின் வெளியீட்டு தேதி: மார்ச் 2025

தேர்வு தேதி:13.04.2025

தேர்வு முடிவு அறிவிப்பு:மே 2025

இது குறித்து கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து