கல்வி/வேலைவாய்ப்பு

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது?

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு பொறுத்தவரையில் ஆன்லைன் மூலம் நடக்கிறது. அடுத்த மாதம் (ஜூலை 7-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி வரை நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

முதலில், அரசு பள்ளியில் படித்த சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7 மற்றும் 8-ந் தேதிகளிலும், பொதுப்பிரிவில் சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையிலும் கலந்தாய்வு நடக்கிறது.

அதன்பிறகு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 14-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி வரையில் 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. துணை கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும், எஸ்.சி. வகுப்பினருக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 25, 26-ந்தேதிகள் வரையிலும் நடைபெற உள்ளது.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி