புதுடெல்லி,
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (என்.எச்.பி.சி) நிறுவனத்தில் காலியாக உள்ள 248 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் வருமாறு:
காலி பணிகள்: 248
பதவி: அசிஸ்டெண்ட் ராஜ்பாஷா ஆபீசர், ஜூனியர் என்ஜினீயர் (சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்ப்யூனிகேஷன்), சூப்பர்வைசர் (ஐ.டி.), சீனியர் அக்கவுண்டெண்ட், இந்தி டிரான்ஸ்லேட்டர்
கல்வி தகுதி: டிப்ளமோ, பி.எஸ்சி., பி.சி.ஏ., முதுகலை பட்டப்படிப்பு
வயது: 1-10-2025 அன்றைய தேதிப்படி அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு.
தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 1-10-2025
இணையதள முகவரி: https://www.nhpcindia.com/welcome/job