மாவட்ட செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 490 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 490 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல், டிச.10-

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 490 காசுகளாக உயர்ந்துள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

சென்னை-505, ஐதராபாத்-475, விஜயவாடா-499, மைசூரு-505, மும்பை-540, பெங்களூரு-505, கொல்கத்தா-560, டெல்லி-555.

கறிக்கோழி கிலோ ரூ.90-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.