நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 445 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை விலை 450 காசுகளாக உயர்ந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-475, ஐதராபாத்-415, விஜயவாடா-428, மைசூரு-457, மும்பை-475, பெங்களூரு-450, கொல்கத்தா-480, டெல்லி-380.
கறிக்கோழி கிலோ ரூ.112-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.68-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.