தென்தாமரைகுளம்,
தென்தாமரைகுளம் அருகே டிரான்ஸ்பார்மரில் வேலை பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
மின்வாரிய ஊழியர்
தென்தாமரைகுளம் அருகே உள்ள இலந்தையடிவிளையைச் சேர்ந்தவர் லாரன்ஸ் ஜோசப்ராஜ், மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மகன் ஜீவானந்த ஸ்டீபன் (வயது24).
கடந்த ஆண்டு லாரன்ஸ் ஜோசப்ராஜ் ஒரு விபத்தில் பலியானார். பணியில் இருந்த காலத்தில் இறந்ததால் அவரது வேலை கருணை அடிப்படையில் மகன் ஜீவானந்தன் ஸ்டீபனுக்கு வழங்கப்பட்டது.
சம்பவத்தன்று ஜீவானந்த ஸ்டீபன் எட்டுக்கூட்டு தேரிவிளையில் உள்ள ஒரு பழுதடைந்த டிரான்ஸ்பார்மரில் சக ஊழியர்களுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
மின்சாரம் பாய்ந்தது
அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து ஜீவானந்த ஸ்டீபன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஜீவானந்த ஸ்டீபன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.