காரைக்கால்
கோட்டுச்சேரியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவிகளின் வசதிக்காக எழுதும் வசதியுடன் கூடிய 50 நாற்காலிகளை அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார். மேலும் கோட்டுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம், மின்துறை அலுவலகம், கொம்யூன் பஞ்சாயத்து, வருவாய் துறை அலுவலகம், வேளாண் அலுவலகம் உள்பட 14 அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் வசதிக்காக இருக்கைகள் வழங்கினார்.