மும்பை

தொழில் அதிபரை மிரட்டி பணம் பறிப்பு ; தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் தாவூத் இப்ராகிம் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மும்பை,

தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் தாவூத் இப்ராகிம் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.

பணம் பறிப்பு

மும்பை வெர்சோவா பகுதியை சேர்ந்த தொழில் அதிபரை மிரட்டி தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா சகிலின் உறவினர் சலீம் புருட், ரியாஸ் பாட்டி ஆகியோர் ரூ.7 லட்சம் பணம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பிலான காரை பறித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தொழில் அதிபர் அளித்த புகாரின் பேரில் வெர்சோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தாவூத் கூட்டாளி கைது

இந்தநிலையில் மும்பை மிரட்டி பணம் பறிப்பு குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்தேரி பகுதியில் தாவூத் இப்ராகிம் கூட்டாளியான ரியாஸ் பாட்டியை பிடித்தனர். பின்னர் விசாரணைக்கு பிறகு அவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் அதிரடியாக கைது செய்தனர். தற்போது போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

ரியாஸ் பாட்டி இதற்கு முன் பல முறை நில அபகரிப்பு, பணம் பறிப்பு, துப்பாக்கி சூடு உள்பட பல்வேறு வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 2015, 2020-ல் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பி செல்ல முயன்றவர் ஆவார். இதேபோல தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு தாவூத் இப்ராகிம் கூட்டாளி சலீம் புருட் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து