சினிமா துளிகள்

கர்ப்பமானதை பகிர்ந்த பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்

சூர்யா, கார்த்தி உள்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்த நடிகை ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

சூர்யா நடித்த மாசு கார்த்தி நடித்த சகுனி உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் சமீபத்தில் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஊரடங்கு காலத்தில் அவருடைய திருமணம் இரு வீட்டாரின் மிகச் சிலர் மட்டுமே கலந்து கொண்டு நடைப்பெற்றது.

இந்நிலையில் நடிகை பிரணிதா அவருடைய கணவரின் பிறந்தநாளில் அவர் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். விரைவில் தங்கள் வீட்டில் ஒரு தேவதையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று பதிவிட்டு பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்