சினிமா துளிகள்

12-வது முறையாக விஷாலுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷாலுடன் 12-வது முறையாக பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, ஆம்பள, துப்பறிவாளன், இரும்புத்திரை, சக்ரா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

இவர் நடிப்பில் சமிபத்தில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகும் லத்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். விஷாலின் 32-வது படமான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. ராணா புரொடக்சன் சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதற்குமுன்பு இப்படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சாம் சி.எஸ் மாற்றப்பட்டு இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை சமூக வலைத்தளப் பக்கத்தில் விஷால் அறிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, "எனது சினிமா வாழ்க்கையில் 12வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைப்பது பெரும் மகிழ்ச்சி. என்னுடைய நண்பர் மற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவை 'லத்தி' படக்குழு சார்பாக வரவேற்கிறேன்" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து