புதுச்சேரி

பாம்பு கடித்து விவசாயி சாவு

புதுவையில் பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தார்.

தினத்தந்தி

பாகூர்

பாகூர் அருகே நிர்ணயப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70). விவசாயி. இந்த நிலையில் நேற்று  இரவு மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக கொட்டாயில் இருந்த வைக்கோலை எடுத்தார். அப்போது அதில் மறைந்திருந்த பாம்பு கிருஷ்ணனை கடித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரிக்கலாம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே கிருஷ்ணன் உயிரிழந்தார்.

இதுகுறித்து பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு