காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி இறந்தார்.
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மோட்டூர் பக்கமுள்ள குரும்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது 54). விவசாயி. இவருக்கு மாட்டுப்பாறை என்ற பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இதில் வன விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
இதை தடுக்க ராமன் தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது மின்சார வேலியில் ராமன் கை வைத்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
போலீசார் விசாரணை
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வன விலங்குகள் விவசாய நிலத்தில் புகாமல் இருந்த அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.