மும்பை

இணைப்பு சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை, மகன் சாவு

காட்கோபர்-மான்கூர்டு இணைப்பு சாலையில் மோட்டார் சைக்கிலில் சென்றபோது விபத்து ஏற்பட்டு தந்தை மற்றும் மகன் உயிரிழந்தனர்

தினத்தந்தி

மும்பை, 

மும்பை காட்கோபர்-மான்கூர்டு இணைப்பு சாலையில் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். செம்பூரில் உள்ள ஜெய் அம்பே குடிசை பகுதி அருகே மோட்டார் சைக்கிள் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மேட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்றனர். படுகாயத்துடன் கிடந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே 2 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர்கள் தந்தை, மகனான முகேஷ் குமார் (வயது28), ராம்ஷ்ரயா (55) என தெரியவந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்