மணிகண்டம், நவ.3-
மணிகண்டம் அருகே உள்ள குடிசைமாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி மீனா (வயது 36). கட்டிட தொழிலாளியான மீனா நேற்று காலை நாகமங்லத்திற்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை (26) என்பவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலத்திற்கும், ஆலம்பட்டி பிரிவு ரோட்டிற்கும் இடையே சென்றபோது திடீரென நாய் குறுக்கே வந்தது. இதனால்செல்லத்துறை பிரேக் பிடித்துள்ளார். இதில் பின்னால் அமர்ந்து சென்ற மீனா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழேவிழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மீனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.